Thursday, 12 January 2012

ஒரிசாவில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழித்து கொலை

ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ராணிபூர் கிராமத்தை சேர்ந்த மாணவி
ஒருவர்பத்ராக் நகரில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தினமும் அவர் ராணிப்பூரில் இருந்து பத்ராக் நகருக்கு தனியார் பஸ் ஒன்றில்
சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை அந்த மாணவி கல்லூரி முடிந்து அந்த பஸ்சில், வீட்டுக்கு
திரும்பிக் கொண்டிருந்தார். ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் அந்த மாணவியை
மிரட்டி கற்பழித்தது. இரவு வரை அந்த பஸ்சுக்குள் மாணவி
கற்பழிக்கப்பட்டார்.
பஸ் கண்டக்டரும் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார். இதில் மாணவி மயங்கி
விழுந்தார். அந்த மாணவியை 2 வாலிபர்கள் பத்ராக் நகரில் உள்ள
மருத்துவமனைக்கு மயங்கியில் நிலையில் தூக்கி வந்தனர். மாணவியை பரிசோதித்த
டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தஅந்த 2 வாலிபர்களும் ஆஸ்பத்திரியில்
இருந்து தப்பி ஓடி விட்டனர். அதன் பிறகே அந்த மாணவி கற்பழித்து
கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் பரவியதும், அந்தமாணவியின் பெற்றோர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அதிரடி வேட்டை நடத்தி பஸ் டிரைவர்,
கண்டக்டரை கைது செய்தனர். மாணவியை கற்பழித்து கொன்ற கும்பலை பிடிக்க
தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.

No comments:

Post a Comment