Friday, 6 January 2012

வயது பிரச்சினைக்காக ராணுவ அமைச்சகத்துடன் மோதல் இல்லை - ராணுவ தலைமை தளபதி

இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் வி.கே.சிங் தொடர்பான ஆவணங்களில்
பிறந்த தேதி 1950-ம்ஆண்டு மே 10 என இருக்கிறது. ஆனால், 1951-ம் ஆண்டு மே
10-ந் தேதி அன்று பிறந்ததாக வி.கே.சிங் கூறுகிறார். இதை, ராணுவ அமைச்சகம்
நிராகரித்து விட்டது.எனவே, ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற வேண்டிய
நிலையில் சிங் இருக்கிறார். இது தவிர, `பாகிஸ்தான் தளபதி போல என்னை
நடத்துகின்றனர்' என்றும் சில நாட்களுக்கு முன் சிங் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், தன்னுடைய வயது விவகாரம் தொடர்பாக ராணுவ
அமைச்சகத்துக்கு எதிராக கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்வார் என
தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது,
`இது போன்ற எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. எனக்கும் ராணுவ
அமைச்சகத்துக்கும் இடையே எந்தவித சர்ச்சையும் கிடையாது. இது முற்றிலுமாக
தனிப்பட்ட விவகாரம்' என்றார்.

No comments:

Post a Comment