Sunday, 8 January 2012

இந்தியா உடனான உறவு:வலுப்படுத்த சீனா ஆர்வம்

இந்தாண்டில் அரசியல் மற்றும் கூட்டுறவு விவகாரங்களில் இந்தியா உடனான உறவை
விரைவாகவும், சீராகவும் வளர்ப்பதற்காக, அந்நாட்டுடன் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டிய நடவடிக்கைகளை சீனா எடுக்கும்' என சீன வெளியுறவு உதவி
அமைச்சர்தெரிவித்துள்ளார்.
காஷ்மீர், அருணாச்சல பிரதேச குடிமக்களுக்கு, தாளில் விசா அளித்தது,
இந்திய ராணுவத் தளபதிக்கு விசா தர மறுத்தது, தலாய் லாமாவைக் காரணம்
காட்டி எல்லைப் பிரச்னை குறித்த பேச்சு வார்த்தையை தள்ளிப் போட்டது என
இந்திய - சீன உறவில் சில பிரச்னைகள் கடந்தாண்டில் எழுந்தன.இதன் விளைவாக,
ராணுவ மட்டத்திலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில், இந்தியா, தனது ராணுவ
பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 30ல் இருந்து 15 ஆக குறைத்தது. இம்மாத
இறுதியில், எல்லைப் பிரச்னை குறித்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
இந்நிலையில், சீனாவின்"ஷின்ஹூவா' நாளிதழுக்கு அந்நாட்டின் வெளியுறவு உதவி
அமைச்சர் லியு ஜென்மின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இரு
நாட்டுத்தலைவர்கள் மத்தியில் முக்கிய பிரச்னைகளில் கருத்தொற்றுமையை
ஏற்படுத்தவும், உயர் மட்ட அளவிலான பேச்சு வார்த்தையை தொடரவும், அரசியல்
தரப்பிலான நம்பிக்கையை அதிகரிக்கவும், இருதரப்பு உறவில் கவலையை
ஏற்படுத்தும் முக்கிய பிரச்னைகளை முறையாகக் கையாளவும் போதுமான
நடவடிக்கைகளை எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது.இவ்வாறு லியு ஜென்மின்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment