குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களின் வழக்கு விவரங்களை அறிந்து,
அவர்களை கைது செய்யாமல் இருக்க செக்ஸ் உறவுக்கு நிர்பந்தப்படுத்தியதாக
இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ்காரர் மீது புகார் எழுந்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங் தாண்டா. வயது 52. இவர் போலீஸ்
கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். டெர்பிஷைர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய
போது, அந்த நகரில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண்களின்
விவரங்களை தெரிந்து கொண்டு, அவர்களை தேடி கண்டுபிடித்து, வழக்கில் கைது
செய்யாமல் இருக்க செக்ஸ் உறவுக்கு நிர்பந்தபடுத்தியதாக புகார்
எழுந்துள்ளது. இதையடுத்து ஜஸ்பிர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் துறை ஆவணங்களில் இருந்த விவரங்களை வைத்து 2 விபசார பெண்களை
கண்டுபிடித்துள்ளார். பணியின் போது அவர்களை கைது செய்யாமல், அவர்களுடன்
செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. "போலீஸ்
கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஜஸ்பிர் வைத்திருந்த ரேடியோ போனுக்கு
அழைப்பு வந்தது. ஆனால், அவர் பேசவில்லை. ஏனெனில் அப்போது என்னுடன் அவர்
உறவு வைத்துக் கொண்டிருந்தார்" என்றுஒரு விபச்சாரப் பெண் போலீஸ்
விசாரணையில் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஜஸ்பிர் சிங்
திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்த வழக்கு விசாரணை நாட்டிங்ஹாம் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல் நீல்மூர் வாதிடுகையில், "ஜஸ்பிர் அரசு
விவரங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். மூன்று பெண்களிடம்அவர் செக்ஸ்
வைத்து கொண்டுள்ளார். 3 பெண்களும் குற்ற வழக்குகளில்
சம்பந்தப்பட்டுள்ளதால், போலீசில் புகார் தெரிவிக்க மாட்டார்கள் என்று
ஜஸ்பிர் நினைத்துள்ளார்" என்றார்
No comments:
Post a Comment