ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில்
நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த துரைவேல் என்பவர், சென்னை அரும்பாக்கத்தில்
உள்ள தனது 1247 சதுர அடி நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான்,
கட்டிடம் கட்டியுள்ளதாகவும், நில அபகரிப்பு குறித்து கேள்வி எழுப்பிய
தன்னை மன்சூர் அலிகான்மிரட்டியதாகவும், புகார் அளித்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த புகார் அடிப்படையில் மன்சூர் அலிகானிடம் துணை கமிஷனர் ராதிகா
மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும்
போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை
போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மன்சூர் அலிகானை போலீசார் கைது
செய்தனர்
No comments:
Post a Comment