Sunday, 22 January 2012

கேரளாவில் தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றவர்களைக் கைது செய்யாதது ஏன்?- வைகோ

கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட
விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் என்று மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
சேலம் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த
ஐயப்ப பக்தர் சாந்தவேலு கேரளாவில் அங்குள்ள டீக்கடைக்காரர்களால் வெந்நீர்
ஊற்றப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த குற்றச்
செயலில்ஈடுபட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஏன் அவர்களைக் கைது
செய்யவில்லை கேரளா.
குற்றம் இழைத்து கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு கேரளாவுக்கு
தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும. பலியான சாந்தவேலு
குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே கேரளாவுக்கு
சாதகமாக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த செயல்
தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதிக்கும்.
தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தை சீர் செய்ய விவசாயிகளுக்கு
ஏக்கருக்கு ரூ. 25,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்றார் அவர்.
Tags: vaiko , வைகோ , kerala , புயல் , சேலம்

No comments:

Post a Comment