ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனார்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பவானி (27). இவரது கணவர் மகாராஜன். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மகாராஜன் குற்றாலத்தில் சீசனை முன்னிட்டு கடை நடத்தி வந்துள்ளார்.
இந்த கடை நடத்துவதற்காக அவர் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடனை கட்ட முடியாமல் மகாராஜன் தவித்து வந்துள்ளார்.இதனால் அவரது மனைவி பவானியும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பவானி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது மூத்த மகன் பார்த்து சத்தம்போடவே பவானியை காப்பாற்றி பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பவானி பரிதாபமாக இறந்தார்.திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் பவானி தற்கொலை செய்து கொண்டதால் தென்காசி ஆர்டிஓ காங்கேயன் கென்னடி விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment