தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
ஜப்பான், பாகிஸ்தான் நாட்டினர் இதை பாடுகின்றனர். இலங்கை
பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்களர்களை மனதில்
வைத்து இப்பாடல் எழுதப்பட்டு உள்ளதாக காரசார விவாதம் நடந்தது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஊழியர் சகாய நிதியம் திருத்த சட்ட திருத்த மசோதா
மீதான விவாதத்தில் ஆளும் கட்சி எம்.பி.யான அஸ்வர் பங்கேற்று பேசும் போது
ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்களை பார்த்து `ஒய் திஸ்கொலை வெறி', `ஒய்திஸ்
கொலை வெறி' என்றார்.
பதிலுக்கு ஜே.வி.பி. கட்சி எம்.பி.க்கள் எமக்கு நோ கொலை வெறி என்றனர்.
தொடர்ந்து அஸ்வர்எம்.பி. பேசும் போது தமிழ் நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி
பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் கொலை வெறி, கொலை வெறி எனபாடலில் கூட
பாடுகின்றனர். எங்கள் மீது உள்ள கொலை வெறியில்தான் நம்மை பார்த்து இந்த
பாடலைபாடியுள்ளனர் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஜோகராஜன் எம்.பி. ஒய் திஸ் கொலை வெறி
பாட்டுக்கு வேறு அர்த்தங்கள் உள்ளன. அஸ்வர் எம்.பி. தமிழகத்தவர்களுக்கு
உள்ள கொலை வெறியில் தான் இந்த பாடல் பாடப்பட்டதாக சொல்வது தவறு. நீங்கள்
பாடலுக்கு தவறான அர்த்தத்தை கற்பிக்க வேண்டாம் என்றார். ஆனால் அஸ்வர்
எம்.பி. குறுக்கிட்டு நான் சொல்வது தான் சரி எங்கள் மீது உள்ள கொலை
வெறியில் தான் இந்த பாடலை பாடி உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment