கள்ளக்காதல் விவகாரத்தில், கழுத்தை அறுத்து மனைவியை கொன்றதாக கணவர் கைது
செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் உமாமகேஸ்வரி நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச்
சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில்
ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், கொளத்தூர்
மக்கார தோட்டத்தைச் சேர்ந்த ரமணி (32) என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்பு
காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கணேஷ் (16), லோகேஷ் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும்
அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
5 வருடங்களுக்கு முன் மூர்த்திக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவரது கை,கால்
பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்கடந்த ஒரு வருடமாக ரமணிக்கும், அதே
பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து
வந்ததாககூறப்படுகிறது.
மூர்த்தி வேலைக்கும், பிள்ளைகள்பள்ளிக்கூடத்துக்கும் சென்றவுடன், ரமணி
கொத்தனாருடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை மூர்த்தி பார்த்துவிட்டு மனைவி ரமணியை கண்டித்து உள்ளார். ஆனால்
ரமணி அதை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மூர்த்தியை
சரிவர கவனிக்காமல் அடிக்கடி தகராறு செய்தும் வந்துள்ளார்.
இதனால் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் மூர்த்தி ஆத்திரம் அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, பிள்ளைகளுடன் வீட்டில் படுத்து
தூங்கினார். ரமணியும் அயர்ந்து தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்த மூர்த்தி, அதிகாலை 2
மணியளவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரமணியின் கழுத்தில்
குத்தியதாகவும் அப்போது ரமணி சுதாரித்துக் கொண்டு எழுந்த போது கழுத்தை
அறுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இரத்த வெள்ளத்தில் ரமணி அந்த
இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும்
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூர்த்தியை கைது செய்தனர். ரமணியின்
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment