Thursday, 26 January 2012

பிரபல நடிகைகளின் பெயரில்ஆபாச சிடி: 3 பேர் கைது

திருச்சியில் பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடி தயாரித்த 3 பேரை
போலீசார் கைது செய்தனர்.
திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில்
தனிப்படை போலீசார் திருச்சி மாநகரில் உள்ள சிடி விற்பனை கடைகளில்
வழக்கம் போல் சோதனைநடத்தினர். அப்போதுதிருச்சி கீழக்கொண்டையம்பேட்டை
பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆபாச சிடிக்கள் தயாரிக்கப்படுவதாக
அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
For free News videos
உடனே அவர்கள் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது
பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடிக்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஆபாச சிடி தயாரித்த நாசர்(26), நூருல் அமீன் (24), பஷீர் (24)
ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்த ஆபாச சிடி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட
கம்ப்யூட்டர், டிவி மற்றும் சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்மதிப்பு சுமார் ரூ. 6லட்சம் என கூறப்படுகின்றது.
Tags: பறிமுதல்
Other articles

No comments:

Post a Comment