தான் 18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி விட்டதாக நடிகை பத்மபிரியா
தெரிவித்துள்ளார். கொலிவுட்டில் பொக்கிஷம் , பட்டியல் , தவமாய்
தவமிருந்து ஆகிய திரைப்படங்களில் பத்மபிரியா நடித்துள்ளார்.
தற்போது கொலிவுட்டில் இருந்து விலகி அமெரிக்காவில் படிக்க பத்மபிரியா
தயாராகி வருகிறார்.
தனது திருமணம் குறித்து நடிகை பத்மபிரியா கூறியதாவது , நான் காதலித்து
திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பில்லை.
ஆனால் நிச்சயம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18
வயதிலேயே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல
மாப்பிள்ளை தான் கிடைக்கவில்லை.
முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு
பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2
குழந்தைகளுக்கும் தாயாக இருக்கவேண்டும் என்றார். அதனால் அவர்கள்
இருவரையும் நிராகரித்துவிட்டேன்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான வரமாகும். எனவே கண்டிப்பாக திருமணம்
செய்து கொள்வேன் என்று நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
எம்.பி.ஏ. படித்திருக்கும் பத்மபிரியா தற்போது நியூயார்க்
பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் படிக்க உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment