Monday, 14 November 2011

டாப்ஸிதான் வேணும்! அடம் பிடிக்கும் டைரக்டர்!!

 
 
 
எனது படத்தின் நாயகியாக டாப்ஸிதான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் தெலுங்குப் பட இயக்குனர் ஒருவர். தெலுங்கில் "ஜீம்மண்டி நாதம் படத்தின் மூலம் டாப்ஸியை அறிமுகம் செய்தவர் மஞ்சு லட்சுமி. இவர் இப்போது தான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க டாப்ஸியைக் கேட்டிருக்கிறார். ஆனால், ஏதேதோ காரணங்களைச் சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம் டாப்ஸி. ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிவிட்டு இப்போது நடிக்க மறுப்பதாக தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் டாப்ஸி மீது புகார் அளித்திருக்கிறார் லட்சுமி. நடிகர் சங்கமோ டாப்ஸிக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கிறது. ஆனாலும், டாப்ஸிதான் என் படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி அடம்பிடித்து காத்திருக்கிறாராம் மஞ்சு லட்சுமி.



No comments:

Post a Comment