Tuesday, 18 October 2011

மலை போல் எகிறிய சந்தானத்தின் சம்பளம்

 

வடிவேலுவை திரையுலகினர் ஓரம் கட்டியதால், நிறைய தயாரிப்பாளர்கள் சந்தானத்தையே தேடுகின்றனர். இதனால் அதிக படங்களில் நடித்து வரும் காமெடி நடிகராகிவிட்டார் சந்தானம். அது மட்டுமின்றி வடிவேலுவைப் போல ஒரு நாளிற்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்குகிறாராம். அதாவது ஒரு நாள் கால்ஷீட் என்றால் 7 லட்சம் கேட்கிறாராம். ஒரு நாளிற்கு 7 லட்சம் எனில் 10 நாட்களுக்கு 70 லட்ச ரூபாயும் ஒரு மாதத்திற்கு இரண்டே கால் கோடியும், ஆண்டிற்கு 27 கோடியும் வருகிறது. ஒரு ஆண்டின் 365 நாளில் வெறும் நூறு நாள் நடித்தாலே 7 கோடி ரூபாயை சம்பாதிக்க போகிறார் சந்தானம்.

No comments:

Post a Comment