தமிழகத்தின் மதுரை அருகே, குலமங்கலத்திலுள்ள அரச மேல்நிலைப்பள்ளியில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல் புதூர் பொலிசில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரில் பள்ளியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரபு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து பொலிசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆங்கில பாட ஆசிரியர் டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர்.
மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி பொலிசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: மாணவிகளிடம் சில்மிசம் செய்த ஆசிரியர்கள்!
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.