Monday, 1 October 2012

நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு



நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

நெல்லை, அக். 1-

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 2,28,312 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக வாசு தேவநல்லூர் தொகுதியில் 1,96,968 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் செல்வராஜ் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5-1-2012 அன்று 21,16,014 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கடந்த 15-9-2012 வரை 9,629 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீதான பரிசீலனையில் 4003 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 5,623 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இது தவிர இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 1,779 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் கிராமசபைகளில் வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்படும்.

அதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரை புதிதாக சேர்க்க வேண்டும். இதற்காக வருகிற 7, 14, 21 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடக்கும் இந்த முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தி அடைவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு 5-1-2013 அன்று இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் செல்வராஜ் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்



சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர் சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

'எங்கேயும் காதல்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. விஜய்யுடன் 'வேலாயுதம்', உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது 'சேட்டை', 'வாலு', 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடித்து வருகிறார். 'சேட்டை' படத்துக்காக ஆர்யா ஹன்சிகா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியோன்று சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவை இருந்தன. ஷாப்பிங் செலவுக்காக அவற்றை வைத்து இருந்தார். எல்லாம் பறிபோய்விட்டது.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார். படிப்பிடிப்பு முடிந்து விமானத்தில் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்த திருட்டு நடந்தது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, திருட்டு போன பையில் எனது கம்ப்யூட்டர் சாதன பொருட்கள் இருந்தன. அவற்றில் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்ததால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளேன் என்றார்.

சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி



சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி

கருங்கல், அக். 1-

புதுக்கடையை அடுத்த இனயம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் ஜான்சன். மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி மரிய தங்கம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜாய்ஸ் (வயது 16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் பள்ளி பாடங்களை படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அவர் சிம்னி விளக்கை பற்றவைத்தார்.

அப்போது விளக்கில் இருந்த மண்எண்ணை ஜாய்ஸ் மீது கொட்டியது. இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பிடித்துக்கொண்டது. இதை கண்டதும் அவரது தாய் மரிய தங்கம் ஓடி வந்து மகளை கட்டிப்பிடித்தபடி தீயை அணைக்க முயன்றனர். இதில் அவரது உடலிலும் தீப்பற்றியது. இருவரும் உயிருக்கு போராடினர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான்சன் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜாய்ஸ் பரிதாபமாக இறந்து போனார். அவரது தாயார் மரிய தங்கம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மற்றும் மகளை காப்பாற்றச் சென்றதில் ஜான்சனுக்கும் கையில் தீக்காயம் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.