Saturday, 4 August 2012

பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா




பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடுத்த� � தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வாகத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறுத்தப்பட்டுள்ளார். 

எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக நிறுத்தினால் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பது பாரதீய ஜனதாவில் உள்ள சில தலைவர்கள� ��ு கணிப்பாகும். 

ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் பகிரங்கமாக நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலின்போதும் அவர் இந்த பிரச்சினையை எழுப்பி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மத சார்பற்ற தலைவர் ஒருவரையே நிறுத்த வேண்டும். 

இதுதொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்கார ி தனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிதிஷ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். 

நிதிஷ்குமாரின் கடும் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதா நரேந்திரமோடியை நிறுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியது. இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளதாக � ��கவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. 

இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை கட்சி இன்றும் முடிவு செய்யவில்லை. 2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை முன் நிறுத்தமாட்டோம் என்று நிதின் கட்காரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 

இதுபற்றி நிதின் கட்காரியை நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த தகவலை உறுதி செய்தார். நிதின் கட்காரி கூறியதாவது:- 
ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லியில் கூட்டணி தலைவர்கள் கூட் டம் நடந்தது. அப்போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

பீகாரில் லல்லு பிரசாத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு முஸ்லிம்கள் ஆதரவு இருந்தது. அதன் பிறகு நிதிஷ்குமார் ஆட்சியை கைப்பற்றினார். முஸ்லிம்கள் ஆதரவை பெறுவதற்காக நரேந்திரமோடியை நிதிஷ்குமார் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. 

மேலும் பீகார் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக நரேந்திரமோடி தெரிவித்த கருத்தும் அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் இருவருக்கும் 2005-ம் ஆண்டு முதல் பனிப்போர் நிலவி வந்தது. அது ஜனாதிபதி தேர்தலின் போது வெளிப்படையாக வெடித்தது. முக்கிய கூட்டணி கட்சியின் எதிர்ப்பு காரணமாக பாரதீய ஜனதாவும் அதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.








ப.சிதம்பரம்... இவர் அமைச்சரா? அல்லது CEOவா?





புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் தனது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்துவிட்டார� ��. ஆகஸ்ட் 8ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதால் அதற்கான குறிப்புகளைத் தயார் செய்ய வார இறுதியில் விடுமுறை நாட்களிலும் அவர்களை பணி செய்யச் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

சிதம்பரத்துடன் பணியாற்றிய நிதித்துறை அதிகாரிகளுக்கு இது புதிதல்ல. வழக்கமாக காலை 8.30 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிடும் சிதம்பரம், முதல் வேலையாக மூத்த அதிகாரிகளுடன் ந ாட்டின் அன்றைய நிலவரம் குறித்து விவாதிப்பார்.

அடுத்ததாக அவர் செய்யும் வேலை தான் மிக இன்ட்ரஸ்டிங்கானது. நேற்று எவ்வளவு வருமான வரி வசூல் ஆனது என்ற விவரம் அவரிடம் தரப்பட வேண்டும். அதைப் பார்த்துவிட்டுத் தான் அடுத்த வேலையை ஆரம்பிப்பார்.

ஆனால், ஜனாதிபதியாகிவிட்ட பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது நிலைமை வேறு. அவர் மிக லேட்டாகவே அலுவலகம் வருவார். ஆனால், இரவில் நெடுநேரம் அலுவலகத்தில் இருப்பார்.

ஆனால், சிதம்பரம் காலையில் மிக சீக்கிரமே வந்துவிடுவார். இதனால் அதிகாரிகளும் காலையில் சீக்கிரமே அலுவலகம் வந்துவிடுகின்றனர்.

மாலையில் இத்தனை மணிக்குப் போவார் என்றில்லாமல் எந்த நேரம் வரையும் வேலையில் இருப்பார். இதனால் அவர் போகும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர் எப்போது கிளம்புவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

ஒரு பைலில் கையெழுத்துப் போடும் அதன் விவரங்களை மிகத் தெளிவாக உள்வாங்கும் திறமை கொண்டவர் சிதம்பரம். இந்த பைலை சிதம்பரத்திடம் தந்த அதிகாரியிடம் கேள்விகள் கேட்டு, விளக்� �ங்களை வாங்கிய பிறகே கையெழுத்துப் போடுவார். இதனால், அவரிடம் பைலை கொண்டு செல்லும் முன் அதிகாரிகள் அது குறித்த முழு விவரத்தோடு போக வேண்டும். இல்லாவிட்டால் திட்டு உறுதி.

வழக்கமாக அதிகாரிகள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடுபவர்களே அமைச்சர்களாக உள்ள நிலையில், சிதம்பரத்தை அறிந்தவர்கள், அவர் மிக மிக வித்தியாசமானவர் என்கின்றனர்.

சட்டமும் படித்தவர் என்பதால் எந்த ஒரு சிறிய திட்ட மாறுதல்களையும் அதன் விளைவுகளோடு சேர்த்து யோசிப்பது தான் சிதம்பரத்தின் பலம். இதனால், திட்டங்கள் தொடர்பான பைல்களை அவர� �டம் கொண்டு செல்லும் முன் பலமுறை யோசித்துவிட்டு, முழு விவரங்களோடு தான் போக வேண்டும் என்கின்றனர்.

அதே நேரத்தில் பைல் முழு விவரத்துடன் இருந்தால், அதை இழுத்தடிக்காமல் படாரென முடிவெடுத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்.

அதே போல உள்துறையில் இருந்தபோதும் தனது காலையை உளவுப் பிரிவின் தலைவர்களுடனான சந்திப்புடன் தான் ஆரம்பிப்பார். அன்று நடக்கப் போகும் சம்பவங்கள் குறித்த உளவுப் பிரிவினரின் சில முன் தகவல்களை வைத்துக் கொண்டு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக உத்தரவு போடுவார்.

தீவிரவாதம், தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மாநில உளவுப் பிரிவினருடன் real-time basis-� �் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளச் செய்வதோடு, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் உடனுக்குடன் தனக்கு அப்டேட் கிடைக்க வேண்டும் என்பார்.

அதே போல தன்னைச் சந்திக்க மிக மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றில்லாமல், துணைச் செயலாளர் அளவில் இருப்பவரைக் கூட இன்டர்காமில் கூப்பிட்டு அவரிடம் கருத்துக் கேட் பார்.

சிறிய அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கூட சீரியஸாக படிப்பார். அந்த அதிகாரியின் குறிப்பை சீனியர் அதிகாரிகள் எந்த அளவுக்கு மதித்தனர் என்பதையும் பார்ப்பார் என்கிறார்கள்.

முகர்ஜியைப் பொறுத்தவரை அவரை கீழ்நிலை அதிகாரிகள் யாரும் தொடர்பு கொள்ளக் கூட முடியாதாம்.

சிதம்பரம் அனுப்பிய சர்க்குலர்:

இந் நிலையில் துணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள நிதித்துறை அதிகாரிகளுக்கு சிதம்பரம் ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில், இப்போது நீங்கள் பார்க்கும் வேலை � �ங்களுக்குப் பிடித்துள்ளதா? என்று முதல் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஆம், பிடித்துள்ளது என பதில் எழுதினால், உங்களது பணியை மேலும் மேம்படுத்த என்ன ச� �ய்யப்பட வேண்டும்? என்று கேட்கிறது இரண்டாவது கேள்வி.

இல்லை, எனக்குத் தரப்பட பணி பிடிக்கவில்லை என்று பதில் எழுதினால், பெரிய வம்பு க� �த்திருக்கிறது. அதாவது அடுத்து 3 கேள்விகளுக்கு அவர்கள் பதில் தர வேண்டும்.

அதில் முதல் கேள்வி, மீண்டும் உங்களது சொந்த பணிக்கே (நிதித்துறைக்கு வரும் முன் இருந்த பதவி) செல்ல விருப்பமா?, வேறு அமைச்சகத்துக்குச் செல்ல விருப்பமா?, அல்லது நிதியமைச்சகத்திலேயே வேறு பதவிக்குப் போக விருப்பமா? என கேள்விகள் தொடர்கின்றன.

நிதியமைச்சகத்திலேயே வேறு பதவிக்குப் போக விருப்பம் என்று பதில் எழுதினால், அந்தப் பதவியில் நீங்கள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று கருதுகிறீர்கள்..? என்று அடுத்த கேள்வியும் வருகிறது.

இதனால் பெரும்பாலான அதிகாரிகள், நான் இருக்கும் பதவியிலேயே சந்தோஷமாகத் தான் இருக்கேன் என்று பதில் எழுதிவிட்டுத் தப்பும் மூடில் இருப்பதாக சொல்கிறார்கள்.

சிதம்பரத்தின் செயல்பாடுகள் வழக்கமாகவே இவர் அமைச்சரா? அல்லது CEOவா? என்று கேள்வி கேட்க வைக்கும். இந்த முறையும் அது தொடர்கிறது.







அஜீத் -20! எஸ்.பி.பி தான் கைகாடினார்!





திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.

பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சே ர்த்தது.  தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத்தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று  அறிவித்த பின்னர்  தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது " அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். "இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்றேன்.

உடனே எஸ்.பி.பி " தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்" என்றார்.


உடனே நான் 'பிரேம புஸ்தகம்' படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறி� � செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

நான் உடனே சென்று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் " என்று கூறினார்.

20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!