Monday, 23 July 2012

மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை: நித்யானந்தா பேட்டி





மதுரையில் நிருபர்களிடம் நித்யானந்தா கூறியதாவது:-  
 
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நிதி மோசடி தொடர்பாக நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக கோர்ட்டு உத்தர விட்டது. கலிபோர்னியாக வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும்தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள் அமைப்புகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.
 
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களில் வாடகைதாரர்கள் காலி செய்யுமாறு எனது சீடர்கள் மிரட்டவில்லை. மருத்துவமனை, பள்ளிகளை புறநகர் பகுதியில் அமைப்பதைவிட நகருக்குள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் காலி செய்யுமாறு கூறி வருகிறோம் . ஜூலை 30-ந்தேதி ஆஜராகும்படி கர்நாடக கோர்ட்டு உத்தரவிடவில்லை.
 
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகும்படிதான் சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 6 மாதங்களுக்கு முன் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் � ��ெய்துவிட்டேன். அங்கு சென்று வந்த பின்பு சி.பி.சி .ஐ.டி. முன் ஆஜராவேன். மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை. ஆதீன சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுபடி செயல்படுவேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.







த்ரிஷா பாய்பிரெண்ட் நயன்தாராவுடன் ஜோடி!





நயன்தாரா-த்ரிஷா இடையேயான சண்டை தமிழ்சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஏன் சண்டை எ� �்ன பிரச்சினை என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் வரிசையாக பல நடிகர்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் இருவரும் அதை ஒப்புக்கொண்டதில்லை.


ஜென்ம விரோதியாக பாவிக்கப்பட்டு ரசிகர்கள் மனதில் எதிரெதிராகவே வைக்கப்பட்டிருந்த இருவரும் திடீரென நண்பர்களாக மாறியது தான் ஹைலைட். ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் கட்டித்தழுவி அன்பு பரிமாறிக்கொண்டனர். இப்போது நண்பர்களாக இருக்கும் இருவரும் கூ டிய விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.

த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக 'ஓங்காரா' என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் எடுக்கப்படவிருக்கிறது. சில மாதத்திற்கு முன் நடந்த நடிகர் நாகேஷ்வர ராவ்வின் பிளாட்டினம் ஜூப்ளி நிகழ்ச்சியில் நயன்தாரா அருகில் அமர்ந்ததற்காக ராணாவுக்கும், த்ரிஷாவிற்கும் இடையே சண்டை என பேசிக்கொள்ளப்பட்டது.







ஜனாதிபதியாகும் பிரணாப் முகர்ஜி பெரும் சலுகைகள்





நாட்டின் 13 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கும் பிரணாப் முகர்ஜிக்கு கிடைக்கும் சலுகைகள் என்னென்ன இங்கு உங்கள் பார்வைக்காக.
 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒரு மாத சம்பளம் 1,50,000  ரூபாய் ஆகும்.
கம்பீரமான அழகான ராஷ்ட்ரபதி பவனில் தங்கும் அவர் அங்கு சிம்லா, ஹைதராபாத் ராஜமரியாதையுடன் நடத்தப்படுவார். ராஷ்ட்ரபதி பவனில் கிட்டத்தட்ட 200 பணியாளர்களோடு ஒரு குண்டுத� ��ளைக்காத விலை உயர்ந்த மெர்சிடிஸ் அலுவலக மகிழ்வுந்தும் அவருடன் இருக்கும்.
 
ஓய்வு காலத்தில் அனைத்து வசதிகள் அடங்கிய ஒரு வாடகை இல்லாத மிகப்பெரிய மாளிகையுடன் மாத ஓய்வு ஊதியமாக ரூபாய் 75,000 ஆயிரம் அவருக்கு வழங்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு, அவருக்கு இரண்டு இலவச தொலைபேசிகளும், ஒரு கைப்பேசியும் வழங்கப்படும்,
 
ஒரு தனிச்செயலாளர் உட்பட 5 பணியாளார்களும், ஒரு அலுவலக மகிழ்வுந்து உட்பட அனைத்து பணியாளர்களுக்கான சம்பளம் ரூபாய் 60000 வழங்கப்படும� �. இரயில் மற்றும் விமானங்களில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக ஒரு உதவியாளருடன் சென்று வரலாம்.







மகாத்மா காந்தி கொல்லப்பட்டது படமாகிறது: கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ்





மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது சினிமா படமாகிறது. மலையாளத்தில் இப்படத்தை எடுக்கின்றனர். தமிழிலும் வெளியிட மு டிவு செய்துள்ளனர். இதில் கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். ஷாஜி கைலாஜ் இயக்குகிறார்.

பிருதிவிராஜ் வைத்து ஷாஜி கைலாஸ் தற்போது சிம்ஹாசனம் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கோட்சே படத்தை எடுக்கின்றனர்.

கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. அவனது குடும்ப சூழல்கள் காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள் போன்றவை படமாக்கப்படுகிறது.

இதுகுறித்து ஷாஜி கைலாஸ் கூறும்போது, கோட்சே படம் உணர்வுபூர்வமான திரைக்கதையில் உருவாகிறது. காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும் உணர்வு போராட்டங்கள� �ம் எப்படி இருந்தது என்பதை திரைக்கு கொண்டு வருகிறோம். நல்லதுக்கும், கெட்டதுக்கும் போராட்டத்தை கருவாக வைத்து இந்த படத்தை எடுக்கிறோம். குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முன் கோட்சேயின் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் படத்தில் சொல்கிறோம் என்றார்.







அஜீத் ரசிகர்கள் என்னை மிரட்டினர் -வில்லன் நடிகர் கே.கே.





அஜீத்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்தவர் கே.கே. ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் நடித்துள்ளார்.

கே.கே. அளித்த பேட்டி வருமாறு:-

பில்லா-2 படம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் அடையாளம் கண்டு பாராட்டுகிறார்கள். அஜீத் ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர். எங்கள் "தல"ய படத்தில் எப்படி அடிக்கலாம் என கேட்டனர்.

எனது வில்லன் கேரக்டர் வலுவாக பதிந்துள்ளதை அதன் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். பிறகு அஜீத் ரசிகர்கள் அமைதியாகி பாராட்டினர். "பில்லா-2" படப்பிடிப்பில் அஜீத்துக்கும் எனக்கும் சண்டை நடந்தபோது என் காலில் காயம் ஏற்பட்டது. அஜீத் பதறிபோய் காலில் வழிந்த ரத்ததை துடைத்து முதல்உதவி சிகிச்� �ை அளித்தார். பெரிய ஹீரோ இவ்வளவு எளிமையாக நடந்தது என்னை பரவசப்படுத்தியது. அவர் சிறந்த மனிதர்.

அஜீத்துடன் நடித்தது பெருமையாக உள்ளது. தற்போது மிங்கினின் மூகமுடி படத்தில் நடிக்கிறேன். அதிலும் எனக்கு பதிவான வேடம். நயன்தாரா, அசின் போன்றோரை தமிழ் திரையுலகம்தான் பெரிய நடிகைகள் ஆக்கியது. கோடம்பாக்கத்துக்கு பவர் இருக்கிறது. சினிமாவுக்கு இதுதான் கடவுள். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து தமிழ� �� படங்களில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






சங்மா குற்றச்சாட்டை ஒதுக்கி தள்ளியது காங்கிரஸ்





நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக பாரதீய ஜனதா அதரவு வேட்பாளரான பி.ஏ.சங்மா போட்டியிட்டு தோல்வியுற்றார்.
 
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தனக்கு ஆதரவாக  வாக்களிக்க வேண்டி தங்களது ஆட்சி அதிகார செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி, வாக்குறுதியளித்து கையூட்டு வழங்கி வெற்றி பெற்றதாக பி.ஏ.சங்மா கூறியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடத்தை அவர்களின் மேன்மையை குறிக்கணும். தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் அதை ஏற்க முடியாமல் விரக்தியில் வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றும் நீங்கள� �� ஒன்றை அடைய முடியாதபோது அந்த பழங்கள் புழிக்கும் என்றுதான் கூறுவீர்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். 
 
பி.ஏ. சங்மாவின் முரண்பாடான இந்த கருத்தை ஒதுக்கி தள்ளிய மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜனார்த்தனன் த்வேதி அப்ப� �ி ஒரு குறுகியப் பார்வையுடன் ஒருவர் பேசக்கூடாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.