Friday, 20 July 2012

பிழைத்துப் போகட்டுமே... கல்யாணம் செய்யாதது குறித்து கோவை சரளா!





நகைச்சுவை நடிகையாக 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோவை சரளா தற்போது சின்னத்திரையில் பாசப்பறவைகள் நிக ழ்ச்சியை நாகரீக உடையில் தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவி வழங்கிய விருதில் ரசிகர்களினால் சிறந்த நகைச்சுவை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த மகிழ்ச்சியோடு இருந்த கோவை சரளா தனது பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

'முந்தானை முடிச்சு' படத்தில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என புதிய பொறுப்புகள் கிடைக ்கிறது. இரண்டுமே பேலன்ஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் எனக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, பெண்கள். நான் எந்தப் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறேனோ, அந்தப் ப ெயரில் செல்லமாக அழைக்கிறார்கள். தெலுங்குப் படங்களில் எனக்கான முக்கியத்துவமும், மரியாதையும் கிடைக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, காமெடி செய்வதே ஹீரோயினுக்கு நிகரானதுதான். ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆகவே ஹீரோயினாக நடிப்பதில் எனக்கு விரு� ��்பம் இல்லை. மனோரமா ஆச்சி, நான் தவிர இப்பொழுது நிறைய பேர் காமெடி செய்கிறார்கள். இருவருக்குப் பிறகு யார் என்று இன்னும் தெரியவில்லை.

தமிழில் புதுப்புது காமெடி நடிகைகள் வர வேண்டும். அப்போதுதான் நடிப்பில் போட்டி இருக்கும். ரசிகர்களுக்கும் வித்தியாசமான காமெடி கிடைக்கும். இப்பொழுது சின்னத்திரையில் சீரியல் வாய்ப்புகளும் வருகின்றன. கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறேன். ரசிகர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

திருமண பந்தத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதேபோல் அக்கறையும் இல்லை. யாரோ ஒருவர், என்னிடம் இருந்து தப்பித்து, பிழைத்துப் போகட்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம்.

உறவினர்களின் வாரிசுகள் எனக்கும் வாரிசுகள்தான். அவர்களுக்காக என்னை நான் அர்ப்பணித்து வாழ்வதில் தனி சுகம் காண்கிறேன். அவர்களை வளர்த்து ஆளாக்கி வருகிறேன்.

நான் சாமியாராகப்போவதாக பத்திரிக்கையில் எழுதிவிட்டார்கள். சாமியாராகித்தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வாழ்க்கையையும் கெடுக்காமல், என்னால் முடிந்தவரை உத வுகிறேன். யாரைப்பற்றியும் அவதூறு பேசுவதில்லை, ஏமாற்றுவதில்லை. என் மனசாட்சிக்குப் பயந்து நடக்கிறேன்.







யார் இந்த அஜீத்? - அரபியர்கள் கேட்டாங்களாம்!





அஜீத் குமாரின் பில்லா 2 படத்துக்கு முதல் நாள் காட்சிக்கு கத்தாரில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து யார் இந்த அஜீ்� �் குமார் என்று அரபிக்காரர்கள் கேட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அஜீத் குமாரின் பில்லா 2 நேற்று தமிழகம் மட்டுமின்றி உலகின் சில பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது. கத்தாரில் உள்ள தமிழர்களுக்கு அஜீத்தின் படத்தை கடந்த வியாழக்கிழமையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. படம் ரிலீஸான முதல் நாள், ஏகப்பட்ட கூட்டம் திரண்டுவிட்டதாம்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவிட்டார்களாம். தியேட்டர் இருக்கும் பக்கமாகச் சென்ற அரபுக்காரர்கள் சிலர் 'யார் இந்த அஜீத் குமார்?' என்று தங்களைக் கேட்டதாக, அஜீத்தின் ரசிகர்கள் சிலர் 'பெருமை'யுடன் கூறியுள்ளனர்.

நாம என்ன கத்தார்ல போயி பாத்தமா.. சொன்னா கேட்டு வைக்க வேண்டியதுதான்!







ஜனாதிபதி தேர்தல்: தவறுதலாக முதலில் சங்மாவுக்கு ஓட்டுப்போட்ட முலாயம்சிங்





குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் முதலில் சங்மாவுக்கு ஓட்டுப் போட்டுவிட்டார� ��. பின்னர் தாம் தவறுதலாக ஓட்டுப் போட்டதாகக் கூறி வேறு ஒரு வாக்குச் சீட்டு வாங்கி பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்திருக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை வாக்களிக்க வந்தார் முலாயம்சிங் யாதவ். அப்போது அவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் டக்கென பி.ஏ.சங்மா பெயருக்கு நேராக கிளிக் செய்துவிட்டார். பின்னர் அவர் தம் தவறை உணர்ந்தவராக மற்றொரு வாக்குச் சீட்டுக் கேட்டிருக்க� �றார். இதற்கு தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருக்கிறார். 2-வதாக வாங்கிய வாக்குச் சீட்டில் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்திருக்கிறார் முலாயம்சிங்.
இதனிடையே குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. கனு கன்சதியா, அம்மாநிலத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இன்னு என்னென்ன கூத்துகள் வெளிவரப்போகிறதோ!







நண்பனுக்காக எல்லாமே செய்யலாம் - விஜய்!





மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் சூப்பர் ஹீரோ படம் 'முகமூடி'. முகமூடி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 20-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. முகமூடி படத்தின் இசையை விஜய் வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை விஜய்க்கு அனுப்பிவிட்டு அவரது பதிலுக்காக காத்திருந்தது முகமூடி யூனிட். விஜய் வருகிறாரா இல்லையா என அறிந்துகொள்ள ஜீவா விஜய்யின் மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி, அதுபற்றி கேட்ட போது நடிகர் விஜய் " நண்பனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என பதிலளித்திருக்கிறார்.

விஜய்யின் பதில் ஜீவாவின் மனதை தொட்டு அவரை உணர்ச்சிவசப்படச் செய்துவிட்டதாம். எந்த அலட்டலும் இல்லாமல் விஜய் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜீவா. முகமூடி படத்தின் இசையை விஜய் வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்� �ுக்கொள்கிறார்.