Saturday, 14 July 2012

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோனின் மகன் மர்ம சாவு





ஹாலிவுட் திரைப்பட உலகில் ஏராளமான ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோன். இவருடைய இளைய மகன் சாகே ஸ்டாலோன் (வயது 36). இவரும் ஹாலிவுட் நடிகர் ஆவார். அத்துடன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தந்தை ச� �ல்வெஸ்டெர் ஸ்டாலோனுடன் இணைந்து 1990-ல் வெளிவந்த `ராம்போ-5', 1996-ல் வெளிவந்த `டே லைட்' ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஆலிவுட் பகுதியில் உள்ள வீட்டில் சாகே ஸ்டாலோன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சாகே ஸ்டாலோன் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும், அவருடைய வக்கீல்களும் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். சாகே ஸ்டாலோன் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
 
இச்சம்பவம் பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீஸ் அதிகாரி ஆன்டி நைமேன் கூறுகையில், `சம்பவம் நடந்த வீட்டிற்குள் வேறு நபர்கள் சென்றதற்கான அடையாளம் இல்லை. சாகே ஸ்டாலோன் இறந்து கிடப்பதை வேலைக்காரர் தான் பார்த்து தகவல் கொடுத்தார். எனவே மரணம் எப்படி? ஏற்பட்டது என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும்' என்றார்.
 
சாகேயின் வக்கீல் ஜார்ஜ் புரான்ஸ்டீன் கூறுகையில், `இது ஒரு துரதிர்ஷ்ட சம்பவம். சாகே திறமையான சிறந்த சினிமா தயாரிப்பாளர். பழகுவதற்கு இனிமையானவர்' என்று குறிப்பிட்டார். சாகே இறந்து கிடந்த இடத்தில் கிடந்த சில பாட்டில்களை போலீசார் கைப� ��பற்றியதாக கூறப்படுகிறது. அதில் என்ன இருந்தது என்பது பற்றியோ, சம்பவத்துக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா? என்பது பற்றியோ போலீசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை. போலீஸ் விசாரணை முடிந்த பிறகே சாவுக்கான பின்னணி என்ன? என்ற விவரம் முழுமையாக தெரியவரும்.
 
நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோன் சான்டியாகோ நகரில் தங்கி இருந்தார். அவருக்கு மகனின் மர்ம மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விரைகிறார்.








தெற்காசிய விளையாட்டு போட்டி: இலங்கை அணியில் 8 விடுதலைப்புலிகள்





டெல்லியில் அடுத்த ஆண்டு தெற்காசிய கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் அணிகள் தேர்வு செய்வதில் இலங்கை ஈட� �பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தெற்காசிய போட்டியில் பங்கேற்க விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை இலங்கை விளையாட்டு துறை மந்திரி ஹர்ஷா அபேகோன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் கூறும்போது, அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டு போட்டியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போருக்கு பிறகு பல்வேறு முகாம்களில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 133 பேரில் இருந்து திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் 4 பேர் துப்பாக்கி சுடுவதில் திறமையானவர்கள். தலா 2 பேர் கிரிக்கெட், கராத்தே வீரர்கள் ஆவர் என்று தெரிவித்தார்.







எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு





ஒரு செல்போனில் இருந்து தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு நாளொன்று 200 குறுஞ்செய்திகள்தான் அனுப்பலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதி� �்திருந்த கட்டுப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. ஆனால் செல்போன் உரிமையாளர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் விளம்பர நோக்கோடு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மீது விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இதுபற்றி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தனிநபர் குறுஞ்செய்திகள் மீது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்த கட்டுப்பாடு, பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. அதே நேரம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தனிநபர் குறுஞ்செய்திகள் மீது புதிய கட்டுப்பாடுகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்துக்கொள்ளலா� ��்' எனக் கூறப்பட்டுள்ளது.
 
வர்த்தக நோக்கோடு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.