Friday, 13 July 2012

கவர்ச்சியாக நடிக்க ஆசை: இனியா





'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் இனியா. தற்போது தங்கர்பச்சான் இயக்கும் 'அம்மாவின் கைபேசி' படத்தி ல் சாந்தனு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் இனியா கவர்ச்சியாக நடிக்கிறாராம்.

காதல் காட்சிகளில் தாவணியின்றி நாயகனுடன் நெருக்கமாக நடித்துள்ளாராம். இதில் முத்தக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. சாந்தனுக்கு தயக்கமின்றி முத்தம் கொடுத்து படப்பிடிப்பு குழுவினரை அதிர வைத்தாராம்.

இதுகுறித்து இனியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
'வாகை சூடவா' படத்துக ்குப்பின் எனக்கு குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கின்றனர். அவர்களைபோல் கவர்ச்சியாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.







துப்பாக்கி மேலும் ஓரு சிக்கல்!





ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவு ப� �றப்பித்துள்ள நிலையில் மற்றொரு பிரச்சினையில் இருக்கிறது துப்பாக்கி யூனிட். கலைப்புலி தானு தயாரித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி சர்கியூட்ஸ் சொந்தம் கொண்டாடுவது தான் அந்த பிரச்சினையாம்.

துப்பாக்கி படப்பிடிப்பு துவங்கிய போது ஜெமினி நிறுவனம் கொடுத்த காசோலைக்கான பணம் அவர்களது கணக்கில் இல்லாததால் கலைப்புலி தானு தான் பணம் கொடுத்து படப்பிடிப்பை துவங்கினாராம். இப்போது ஜெமினி நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை கேட்பதால் கலைப்புலி தானு "இதுவரை துப்பாக்கி படத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தை கொடுத்துவிட்டு படத்தின் உரிமையை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டாராம்.

     

ஆனால் துப்பாக்கி படத்திற்கு இதுவரை செய்யப்பட்ட செலவு ஜெமினி நிறுவனம் போட்ட கணக்கை தாண்டி போய் நிற்கிறதாம். ஏற்கனவே டைட்டில் பிரச்சினையில் இருக்கும் துப்பாக்கி படத்திற்கு பிரச்சினை இரண்டாவது ரவுண்டு வருகிறது.

இயக்குனர் முருகதாஸ் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களில் ஒருவர் "சூர்யா தான் மாஸ். இந்த வருடம் சினிமாவின� �� ஆட்சியில் 'மாற்றான்' ஆட்சி தான் என்று சொல்ல. அதற்கு முருகதாஸ் "பாப்பா கொஞ்சம் தள்ளிப் போய் விள� ��யாடு" என்று கூறியுள்ளார்.







யாகூ இணைய தளத்தில் 4 1/2 லட்சம் பாஸ் வேர்டுகள் திருட்டு





இணைய தளங்களை பயன்படுத்துபவர்களின் ரகசிய குறியீடுகளை (பாஸ் வேர்டுகள்) திருடி அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல்களை ஒரு கும்பல் திருடி வருகிற து. இது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், பிரபலமான 'யாகூ' இணைய தளத்தில் 4 லட்சத்து 53 ஆயிரம் பேரின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்)  திருடப்பட்டுள்ளன. இது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்� ��்தியுள்ளது.  இது எப்படி நடந்தது? யார் திருடினார்கள் என்று தெரியவில்லை என 'யாகூ' இணைய தளம் கூறியுள்ளது.
 
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் இங்கிலாந்து தலைமை அலுவலக நிர்வாகி பி.ஆர். கரோலின் மோக்லியோட் ஸ்மித் கூறும்போ� ��ு, இச்சம்பவம் நடந்தது உண்மைதான். அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்க இயலாது என அவர் மறுத்துவிட்டார். 







முன்பதிவில் சாதனை படைத்த ‘பில்லா 2’





அஜீத், பார்வதி ஓமனக்� �ுட்டன் நடிக்கும் பில்லா 2 படம் நாளை வெளிவரவிருக்கிறது. இப்படம் சென்னை மாயாஜாலில் மட்டும் முதல் நாளிலேயே 76 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்ய� �்பட்டு, 'பில்லா 2' படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இவ்வகையில் முன்னதாக அஜீத்தின் 'மங்காத்தா' படம் 75 காட்சிகள் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது. மேலும் 'பில்லா 2' படத்துக்கான முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மதியத்தி� �்கு முன்னதாகவே 15,000 டிக்கெட்டுகள் ஆன்-லைனில் புக் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கிங் ஆப் ஓப்பனிங் என்ற பெயருக்கு தான் பொருத்தமானவர் என்பதை அஜீத் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

தேவி, சங்கம், அபிராமி, ஏ.ஜி.எஸ், பேம் மற்றும் ஐநாக்ஸ் உள்ளிட்ட மற்ற தியேட்டர்களிலும் இப்படத்தின் டிக்கெட்டுகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் 'பில்லா' 2 படம் வசூலில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.







கியூபாவில் அல்பச்சுனோ! ஈழத்தில் அஜீத்!





பில்லா-ll இன்னும் சில தினங்களி� �் திரைக்கு வரவிருக்கிறது சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள பில்லா-ll படத்தில் அஜீத் இலங்கை அகதியாக நடித்திருக்கும் காட்சிகள் டிரெய்லரில் வெளியிடப்பட்டதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத்.   அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாகி, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சிப் போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதேபோல் பில்லா-ll வில் 'தல' அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அள வில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்!