Monday, 9 July 2012

கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க உதவியாக புதிய இணையதளம்: ரிசர்வ் வங்கி தொடங்கியது

இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பலர் கள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடியாமல் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் இது குறித் து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கி இருக்கிறது. 

கள்ள நோட்டுகளை எந்தெந்த முறையில் கண்டுபிடிக்கலாம் என்ற விவரம் அதில் உள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி www.paisaboltahai.rbi.org.in ரூபாய் நோட்டுகளின் பெரிய அளவிலான படங்களையும் (போஸ்டர்) கள்ள நோட்டு தொடர்பான ஆவண படத்தையும் அந்த இணையதளத்தில் இருந்து நுகர்வோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல்: 7 வீரர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் குஜ்ராத் நகர் அருகே வசிராபாத் என்ற இடத்தில் ராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கி உள்ளனர். நேற்று காலை அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட� �டனர். சற்று நேரத்தில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் அங்கு வந்தனர். அவர்கள் முகாமுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். 

இதில், 6 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ்காரரும் பலியானார்கள். 5 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்� �ு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.




இனக்கலவரம் வெடித்தது: நைஜீரியாவில் எம்.பி. உள்பட 115 பேர் சுட்டுக்கொலை


நைஜீரியாவில் பிளேச்சு மாநிலம் பர்கின் லாடி மாவட்டத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ பழங்குடியினருக்கும், இடம்பெயர்ந்து வந்த புலானி பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
 
கடந்த சனிக்கிழமை, கிறிஸ்தவ பழங்குடியின கிராமங்களுக்குள் புகுந்து புலானி இனத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், 63 பேர் பலியானார்கள். அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
 
அதில், ஆளும்கட்சி செனட் எம்.பி. கியாங் டான்டோங், மாநில எம்.எல்.ஏ. ஒருவர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, புலானி இன பழங்குடி மக்கள், மீண்டும் வந்து தாக்குதல் நடத்தினர். இதில், எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 52 பேர் பலியானார்கள்.



இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரும் விடுதலை


கடந்த சிலநாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து சென்ற மீனவர் செந்தூர்பாண்டி உள்பட 5 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து மன்னார் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கரை திரும்பாத செந்தூர்பாண்டி உள்பட 5 மீனவர்களை தேடி கார்டன் என்பவரின் தலைமையில் 5 பேர் கச்சத்தீவு பகுதிக்கு சென்றனர். அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. 

இதற்கு எதிர்பபு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தத� �திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். 

இதனையடுத்து மத்திய அரசு இதுதொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செந்தூ� �்பாண்டி, கார்டன் உள்பட 10 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலையான மீனவர்கள் நாளை ராமேசுவரம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.



காதலன் திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்ப்பேன்: கல்லூரி மாணவி பேட்டி


மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 21). பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்து வந்தனர். 

திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அனிதா� ��ை சாஜன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிதா, சாஜன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

சாஜன் தன்னை திருமணம் செய்து கொள்ளும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அனிதா கூறி வருகிறார். ஆனால் சாஜன் வீட்டில் யாரும் இல்லை. அவரது வீடு பூட்டியே கிடக்கிறது. இன்று 3-வது நாளாக போராட ்டத்தை தொடர்ந்த அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

சாஜனுக்கும், எனக்கும் பள்ளி பருவத்திலேயே காதல் ஏற்பட்டது. அவர் தான் என் கணவர் என்று எண்ணிய நான் பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன். கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்குச் சென்று நாங்கள் ஜாலியாக இருந்தோம். 

இந்தநிலையில் தான� �� அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நாங்கள் 2 பேரும் கன்னியாகுமரியில் லாட்ஜ் அறை எடுத்து தங்கி இன்பமாக இருந்தோம். அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு ஜோடியாக வந்தோம். அப்போது எனது தந்தை மற்றும் உறவினர்கள் எங்களை பிடித்து ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சாஜன் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், 7-ந் தேதி எனது வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்க வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி 7-ந் தேதி வரவில்லை. இங்கு வந்து பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. போனில் தொடர்பு கொண்டு கேட்டால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிறார். 

நல்ல வேலையில் இருப்பதால் வரதட்சணைக்கு � ��சைப்பட்டு அவரை உறவினர் ஒருவர் இயக்கி வருகிறார். அவரும் அதற்கேற்ப நடந்து கொள்கிறார். நேற்று மாலை சாஜன் எனக்கு போன் செய்தார். நாளை போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்கள். அங்கு உன்னை கைகழுவி விடுவேன். நீ வரா விட்டால் நடப்பதே வேறு என்று கூறி மிரட்டினார். நான் இன்று பேச்சுவார்த்தைக்கு போக மாட்டேன். சாஜனின் மனைவியாக தான் இங்கிருந்து செல்வேன். இல்லாவிட்டால் இங்கேய� � பிணமாவேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட அனிதாவுக்கு அந்த பகுதியினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இன்று வைரஸ் தாக்குதல்... உங்க கம்ப்யூட்டர் நல்லாருக்கா, 'செக்கப்' பண்ணி பார்க்க


இன்று உலகம் முழுவதும் டிஎன்எஸ்சேஞ்சர் என்ற கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உங்களது கம்ப்யூட்டர் சரியாக செயல்படுகிறதா அல்லது வைரஸ் பாய்ந்துள்ளதா என்பதை அற� �ய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ ஒரு இணையதளத்தை திறந்துள்ளது. அதில் போய் உங்களது கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இன்று உலகம் முழுவதும் டிஎன்எஸ்சேஞ்சர் என்ற கம்ப்யூட்டர் மால்வேர் வைரஸ் தாக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி, கம்ப்யூட்டர்களுக்கு மஞ்சக் கயிறும், தாயத்தும் போடாத குறையாக மக்கள் பீதியில் இருந்தார்கள். அந்த திங்கள்கிழமையும் இன்று வந்தாகி விட்டது.

இதுவரை எத்தனை கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் உங்களது கம்ப்யூட்டர் பத்திரமாக இருக்கிறதா, இல்லை பஞ்ச� ��யத்தில் கிடக்கிறதா என்பதை அறிய அமெரிக்க எப்பிஐ ஒரு இணையதளத்தை திறந்துள்ளது.

அதற்கான இணைப்பில் போய் கிளிக் செய்தால், பச்சை நிறத்தில் பெரிய டப்பா வரும். அப்படி வந்தால் நீங்கள் படு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்ததம். மாறாக ரெட் போட்டு வந்த� �ல் உங்களது கம்ப்யூட்டர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அர்த்தம். உடனே அதை ஒரு 'சிஸ்டம் அட்மின் டாக்டரிடம்' காட்டி சரி செய்ய வேண்டும்.

இதோ இதுதான் அந்த இணைப்பு. இங்கு போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள்


http://dns-ok.us/





பரீட்சையில் முட்டையே வாங்கினாலும் பிஇ படிக்கலாம்... !


நுழைவுத் தேர்வில் உங்களுக்கு ஒரு கேள்வியும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எதற்கும் பதிலளிக்காமல் முட்டையே வாங்கினாலும் கூட பரவாயில்லை, அட, கேள்வித்தாளை வாங்கி அதை அப்படியே பெயரை மட்டும் எழுதித் திருப்பிக� �� கொடுத்தாலும் கூட பரவாயில்லை, உங்களுக்கு கண்டிப்பாக பிஇ சீட் உண்டு. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. ஆனால் ஆந்திராவில் இது நிஜமான ஒன்று.

ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இப்படி முட்டை மார்க் வாங்குவோருக்கும் கூட சீட் கொடுக்கிறார்களாம்.

இந்த ஆண்டு நடந்த நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 78 பேர் கலந்து கொண்டு எழுதினர். இவர்களில் 22 பேர் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை. அனைத்துமே தவறான பதில்கள்தான். இதனால் அவர்களுக்கு ஒரு மார்க் கூட கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், அடிப்படைத் தகுதியான பிளஸ்டூவில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் களை இவர்கள் பெற்றுள்ளதே. அதில் இவர்கள் தேவையான மதிப்பெண்களை வைத்திருப்பதால் நுழைவுத் தேர்வில் ஒரு மார்க் கூட வாங்காவிட்டாலும் பரவாயில்லை, சீட் கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 22 பேரில் 9 பேருக்கு பொறியியல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 13 பேருக்கு கால்நடை மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது.

நுழைவுத் தேர்வில் முட்டை மார்க் வாங்கும் தலித், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களால் எம்.பி.பி.எஸ் படிப்பில் மட்டுமே சேர முடியாது. மற்றபடி பொறியியல், விவசாயம், பல் மருத்துவம், கால்நடை, தோட்டக்கலைத்துறை ஆகிய படிப்புகளில் சேர வாய்ப்பளிக்கப்படும்.

ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்ழகம்தான் ஆண்டு தோறும், பொறியியல், மருத்துவ, விவசாயப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ரிசல்ட் கடந்த வாரம் வெளியானது.
மொத்தம் தேர்வு எழுதிய 90,917 பேரில் 83,686 பேர் தேர்வாகியுள்ளனர்.

நாட்டிலேயே அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் உள்ளது ஆந்திராவில்தான். அங்கு 671கல்லூரிகள் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அங்கு மாணவர் சீட� �களை விட கல்லூரிகள் குண்டக்க மண்டக்க இருப்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரம் சீட்கள் காலியாகவே கிடக்கின்றன. இந்த ஆண்டு 1 லட்சம் சீட்கள் வரை காலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுழைவுத் தேர்வில் மார்க்கே வாங்காமல் சீட் தருவது குறித்து மாநில ஆளுநர் நரசிம்மன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நுழைவு த் தேர்வில் ஒரு மார்க் கூட பெறாதவருக்கு தொழில்கல்வியில் இடம் தருவது என்பது ஏற்க முடியாத ஒன்றாகும். இதை சரி செய்ய வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் என்று ஏதாவது இருக்க வேண்டும். நுழைவுத் தேர்விலேயே முட்டை மதிப்பெண் பெறும் ஒரு மாணவரால் எப்படி பொறியியல் படிப்பு போன்றவற்றை முடிக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும் அவர்களை அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எப்படி நடத்� ��ுவார்கள். இது மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றார்.

கடந்த ஆண்டும் இப்படித்தான் 26 பேர் மார்க் ஏதும் வாங்காமலேயே அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு பொறியியல் படிப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.