Thursday, 5 July 2012

தாய் - சகோதரியுடன் நடிகை லைலாகான் சுட்டுக்கொலை: தாவூத் கூட்டாளியை திருமணம் செய்தவர்


பிரபல இந்தி நடிகை லைலாகான். பாகிஸ்தானில் பிறந்த இவர் மும்பையில் தங்கி இந்திப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2008-ம் ஆண்டு ராஜேஷ் கன்னாவுடன் வாபா என்ற இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தார். மும்பையில் ஒரு அபார்ட் மென்ட்டில் வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் தாயார் சலீனா பட்டீல், சகோதரி ஆஸ்� ��ினா பட்டீல், வளர்ப்பு தந்தை ஆசிப்சேக் ஆகியோரும் வசித்து வந்தனர். அப்போது லைலாகான் திடீர் திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்தை அவர் ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் லைலாகானை திருமணம் செய்தவர் மும்பை குண்டு வெடிப்பில் தேடப்படும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என தெரிய வந்தது. இதனால் லைலாகானிடம் மும்பை தீவிரவாத தடுப்பு பிரி� ��ு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து இருந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீர் என்று லைலாகானும், அவரது தாய், சகோதரி, வளர்ப்பு தந்தை ஆகியோரும் மாயமாகி விட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மும்பையில் பரபரப்பு வதந்தி பரவியது. ஆனால் மும்பை போலீசாரால் அதை உறுதிப்படுத்த முடிய வில்லை. 

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன் லைலாகானின் உறவினர் பர்வேஸ் அகமத் தக் என்பவர் ஜம்மு போலீசில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் லைலாகான் பற்றி விசாரித்தபோது, லைலாகானும் குடும்பத்தினரும் போலி பாஸ்போர்ட்டில் துபாய்க்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அங்கு அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித் திருந்தார். இதை போலீசார் நம்பவில்லை. தொடர்ந்து � �வரிடம் காஷ்மீர் போலீசாரும், மும்பை போலீசாரும் இணைந்து விசாரித்தனர். அப்போது லைலாகான் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி மாதமே கடத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். 

நடிகை லைலாகானின் தாயார் சலீனா பட்டீல், இவர் கணவர் நதிர்ஷாபட்டீலை விவகாரத்து செய்து விட்டார். அவர்தான் லைலாகானும், தாய், சகோதரி, வளர்ப்பு தந்தையும் � �ாயமாகி விட்டதாக முதலில் மும்பை போலீசில் புகார் செய்து இருந்தார். அதன் பிறகு போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். லைலாகான் பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்தது. இப்போது லைலாகான், தாயார், சகோதரி, வளர்ப்பு தந்தை ஆகிய 4 பேருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேலும் 2 பேரும் மாயமாகி இருந்தனர். அவர்களும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இந்த தகவலையடுத்து மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கினர். இதில் லைலாகான் குடும்பத்தினருடன் மும்பை புறநகர் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. சொத்து தகராறு காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மும்பை போலீசார் கருதுகிறார்கள். லைலாகான் கடத்தலில் ஜம்மு போலீசில் பிடிபட்� �� பரவேஷ்தக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தந்தை நதிர்பட்டீல் போலீசில் சந்தேகம் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து பரவேஷ்தக்குடன் ஆசிப்சேக் என்பவரும் பிடிபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 6 பேரது உடல்களை எங்கே வீசினார்கள் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. பிணங்கள் கிடைத்தால்தான் இதில் உறுதி முடிவுக்கு வர முடியும� �� என்று போலீசார் தெரிவித்தனர். 

இதற்கிடையே பரவேஷ்தக் பிடிபட்ட ஜம்மு புறநகர் பகுதியில் மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட கார் சிக்கியது. அந்த காரை பரவேஷ்தக் வாடகைக்கு எடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. லைலாகானை திருமணம் செய்தவர் கதி என்ன? என்பது மர்மமாக இருக்கிறது. லைலாகான் கொலை செய்யப்பட்ட தகவல் மும்பை சினிமா வட்டாரத்தில் பெரும் பர� ��ரப்பை ஏற்படுத்தி உள்ளது.



குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பு மனு பரிசீலனை- சங்மாவின் ஓயாத போர்க்கொடி


குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடர்பான ஆவணங்களை வேட்பாளரான சங்மாவுக்கு கொடுக்க தேர்த� ��் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்வோர் ஆதாயம் தர� ��்கூடிய பதவியில் இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால் வேட்புமனுத்தாக்கலின் போது இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தார் என்பது சங்மாவின் ஆட்சேபனை. இது தொடர்பாக பிரணாப்பிடம் விளக்கம் கோரப்பட்டது. அந்த விளக்கத்தை ஏற்று பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
ஆனாலும் இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரணாப் முகர்ஜி கொடுத்த ராஜினாமா கொடுத்தம் போலியானது என்று கூறி பாஜக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கிய்ள்ளது. இதேபோல் வேட்புமனு பரிசீலனை பற்றிய ஆவணங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று பி.ஏ.சங்மா, தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஆவணங்களை சங்மாவுக்கு கொடுக்கலாமா என்று தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் அதிகாரி அக்னிகோத்ரி யோசனை கேட்டிருந்த� ��ர். தேர்தல் ஆணையமும் பி.ஏ.சங்மா கேட்கும் ஆவணங்களைக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சங்மாவின் வழக்கறிஞர் சத்யபால் ஜெயின் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அத்தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர முடியும். வேட்புமனுத்தாக்கலின் போது பிரணாப் இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவராகத்தான் இருந்தார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்களில் உள்ள அவரது கையெழுத்துகளையும் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கும் ராஜினாமா கடிதத்தில் உள்ள க� ��யெழுத்தையும் மன்மோகன்சிங்கும் சோனியாவும் பார்த்து விளக்கம் தர வேண்டும் என்றார் அவர்.


விஜய் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள்!



சென்னை அருகே விஜய் ரசிகர்களை தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயர் பலகை திறப்பு விழா சென்னை அருகே பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நேற்று நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். அதைப் பார்த்த தேமுதிகவினர் ஓட்டம் பிடித்தனர்.
தேமுதிகவினர் நடத்திய தாக்குதலில ் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிகவைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.


சுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்?: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான பணம் சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்ய� �்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி ஜமீன். ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஜமீனுக்கு சொந்தமான பல சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சிவகிரி ஜமீனான செந்தட்டிக்காளை பாண்ட ிய சின்னத்தம்பியார் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஏராளமான சொத்துகளுக்கு அவர் உரிமையாளர் ஆனார். பின்னர் அந்த சொத்துகளில் பல அவரது வாரிசான வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியாருக்கு சொந்தமாகின.

அதன் பின்னர் வரகுணராம பாண்டிய தம்பியாரின் சட்டபூர்வமான வாரிசு நான்தான் என்று கூறி எஸ்.கே.ஜெகநாதன் என்பவர் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். எனினும் நான்தான் உண்மயான வாரிசு என்று கூறி திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த பத்மினி ராணி அந்த � �ழக்குகளில் பிரதிவாதியாகச் சேர்ந்துள்ளார். இவை நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் பல ஊர்களில் பரவிக் கிடப்பதாகவும், � �ிருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் பல சொத்துகள் உள்ளதாகவும், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான எல்லா சொத்துகளையும் அடையாளம் கண்டு, அதனை வரகுணராம பாண்டிய சின்னதம்பியாரின் சட்டபூ� �்வ வாரிசான தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி பத்மினி ராணி ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி. ஜோதிமணி, எம். துரைசாமி ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகிரி ஜமீன் சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுவிஸ் வங்கியில் முதலீடு

இதன்படி மாநில காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஒருவரைக் கொண்டு தமிழக அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் அறிக்கை கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இது தவிர சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான பணம் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியிலும் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வங்கிக் கணக்கு தொடர்பான பொது அதிகாரத்தை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காசினா என்பவர் பெற்றிருந்தார். காசினா மும்பையைச் சேர்ந்த மாயா என்ற பெண்ணை திருமணம ் செய்தவர் ஆவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மும்பைக்காரருக்கு அதிகாரம்?

இதற்கிடையே அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் வித்யா என்ற பெண் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காசினா சாலை விபத்தில் இறந்து விட்டார். நான் அவரது மனைவியான மாயாவின் தங்கை. சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான பணம் சுவிஸ் வங்கியில ் இருப்பது தொடர்பான பொது அதிகாரம் தற்போது எங்களிடம்தான் உள்ளது. ஆகவே, அந்த சொத்துகளில் எங்களுக்குதான் உரிமை உள்ளது என்றார்

இதனைத் தொடர்ந்து வெளிநாடு உள்பட சிவகிரி ஜமீனின் சொத்துகள் பல இடங்களில் பரவிக் கிடப்பதால் இதுபற்றி விரிவான விசாரணை நடத்தும் வகையில் இந்த விவகாரத்தை ஆராயும் பொறுப்பினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி நீதிதிகள் உத்தரவிட்டனர். மேலும், பாண்டிய மன்னர்களின் வாரிசுகளின் பணம் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த எந்த வங்கியிலாவது முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இலங்கை ஜெயிலில் தமிழ் தலைவர் அடித்து கொலை: சிங்கள வீரர்கள் அட்டூழியம்


இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் நிமலரூபன் (வயது 28). அரசியல் தலைவராக இருந்து வந்தார். இவரை இலங்கை படையினர் கைது செய்து வவுனியா ஜெயிலில் அடைத்தனர். இவருடன் ஏராளமான தமிழ் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் வவுனியாவில் இருந்து அனுராதாபுரம் மகர சிறைக்கு மாற்றினார்கள். அங்கு அவர்கள் போராட்ட� ��்தில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவத்தினரும், ஜெயில் காவலர்களும் கண் மூடித்தனமாக தாக்கினார்கள். 

இதில் நிமலரூபன் உயிரிழந்தார். மேலும் 6 தமிழர்கள் படுகாயம் அடைந்தள்ளனர். அதில் ஒருவர் கோமா நிலையில் இருக்கிறார். 2 பேருடைய கால் எலும்பு உடைக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய காலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. 

இலங்கை சிறைகளிலிருந்து தமிழர்களை சிங்கள படையினர் தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நிமலரூபன் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இலங்கை தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கை எம்.பி. சுரேஷ், ஹேமச்சந்திரன், நிமலரூபன் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியா? மத்திய அரசுக்கு ஜெ கண்டனம்

முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெய� �்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்தத்  த� ��ுணத்தில், இலங்கை நாட்டின் ஒன்பது விமானப் படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறே� �். 

இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட த� �ர்மானத்தின் மீது,  வாய் மூடி மௌனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். 

இலங்கை இனப்போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வ� �ேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்-அமைச� �சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.