Friday, 1 June 2012

ராணுவத்தையும் நாடாளுமன்றத்தையும் உடைக்க ஒரு திட்டம்

இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு நல்ல, விரிவான யோசனையை பத்ரி சேஷாத்ரி அளித்திருக்கிறார் – படிப்படியான தனியார்மயமாக்கல். ரயில்வேயில் உள்ள ஊழலை ஒழிக்கவும், லாபம் கொழிக்கும் நிறுவனமான அதை மாற்றியமைக்கவும் ‘உலகத் தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கவும்’ இந்தத் திட்டம் பயன்படும் என்பது பத்ரியின் நம்பிக்கை. அவர் பாணியிலேயே சிந்தித்தபோது, மேலும் சில திட் டங்கள் உதயமாயின. ரயில்வே துறையை உடைத்த கையோடு இவற்றையும் அமல்படுத்தினால், கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும். 1. இந்திய ராணுவத்தை உடைக்கவேண்டும் [...]http://kallaool.blogspot.in

அன்பே சிவம் – 2

முதல் பகுதி இந்தப் படத்துக்கான மாற்றுத் திரைக்கதைக் குறிப்புகளை எழுதுவதற்கு முன்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) என்ற பெயரில் நிழல் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கும் எனது புத்தகத்துக்கு தமிழ் ஸ்டூடியோ வலைதளத்தில் வெங்கட் சாமிநாதன் விமர்சனம் எழ� �தியிருக்கிறார். அவரைப் போன்றவர்கள் பொருட்படுத்திப் பேசத் தகுந்த விதத்தில் எழுத ஆரம்பித்திருப்பது குறித்து சந்தோஷமாக இருக்கிறது. பல விஷயங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், [...]http://kallaool.blogspot.in