Monday, 5 March 2012

விஜய், சிம்பு, விக்ரம், தனுஷ் ஆகியோர்கள் வரிசையில் இப்போது விமல்

 


நடிகர்கள் பாடகர்கள் ஆவது ஒன்றும் புதிதல்ல. அந்தவகையில் விஜய், சிம்பு, விக்ரம், தனுஷ் ஆகியோர்கள் வரிசையில் இப்போது விமலும் சேர்ந்து இருக்கிறார். இதுநாள் வரை நடிகராக மட்டும் இருந்து வந்த விமல், இப்போது பாடகராகவும் மாறியிருக்கிறார். பசங்க, களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவர் இப்போது சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு, மசாலா காபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் மசாலா காபி என்ற படத்தில் தனது சொந்த குரலில் ஒரு பாட்டு ஒன்று பாடியிருக்கிறார் விமல். விஜய் எபினேசரின் இசைக்கு விமல் பிரமாதமாக பாடியிருக்கிறார். பாட்டும் ரொம்ப பிரமாதமாக வந்திருப்பதாக கூறியிருக்கிறார் விஜய் எபினேஷர். சுந்தர்.சி இப்படத்தை இயக்கி வருகிறார். விமலுடன் அஞ்சலி, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

முகத்தை மூடியபடி கமலுடன் மும்பையில் சுற்றிய கண்மணி (Photo in)


கண்மணி அன்போடு..காதலன் நான் கமல்ஹாசன் எழுதும் கடிதம்… லெட்டர் …சரி மடல்ன்னே வச்சிக்கயேன் …என்று ஒரு நடிகையுடன், அதுவும் அவரை முக்காடு போட்டுக்கொள்ளச்சொல்லி, கமல் மும்பை வீதிகளை வலம் வந்தது தான் இப்போது அங்கே ஹாட்டஸ்ட் செய்தி.

தனக்கு வயது அறுபதை நெருங்கிய வேளையில், இனிமேல் காதல் கிசுகிசுக்களில் அடிபடக்கூடாது. அப்படி மீறி அடிபட்டால் அது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று முடிவு செய்திருந்த கமல், சில காலமாகவே கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

ஆனால் சமீபத்தில் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் நெருங்கிப்பழக ஆரம்பித்த பிறகு அவரால், அப்படத்தின் இன்னொரு நாயகியான பூஜாகுமாரின் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

யெஸ் உங்கள் யூகம் சரிதான். மும்பையில் கமலுடன் முக்காடு போட்டுக்கொண்டு திரிந்தது சாட்சாத் இந்த பூஜா குமார் தான். நீங்கள் ரெகுலர் சினிமா ரசிகராக இருந்தால் இந்த பூஜா என்கிற இந்த பழைய கூஜாவை, ராஜாவின் சூப்பர் ஹிட் மெலைடிகளுல் ஒன்றான 'காதல் ரோஜாவே' என்ற பாடலை ஹம் செய்த படியே இவரை ஹண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக்காதல் ஜோடி, முதலில் மும்பை புகைப்படக்காரர் ஒருவர் கண்ணில் பட, அவர் கூட இருந்தது யார் என்று தெரியாததால்,கமலுடன் ரகஸியமாக அலையும் ஒரு பெண் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுவிட்டார். உடனே அவர்கள் இருவருக்குள் மட்டுமே எரிந்துகொண்டிருந்த தீ மும்பை முழுக்க பற்றிக்கொண்டது.

'இது என்னடா வம்பாப்போச்சி' என்று நொந்த கமல் உடனே தனது பி.ஆர்.ஓ. திகில் முருகனை அழைத்து, 'அது ஒரு பெண் என்று மட்டும் வரும்போது செய்தி மிக ஆபாசமானதாக காட்சி அளிக்கிறது. எனவே என் கூட சுற்றியது 'விஸ்வரூபம்' நாயகி பூஜாகுமார் தான் என்றும் நாங்கள் இருவரும் ஒரு ஃபோட்டோ ஷூட் சம்பந்தமாக மும்பை வந்தோம் என்றும் தெரிவித்து விடுங்கள் என்றாராம்.

சொல்லவே இல்ல…முந்தியெல்லாம் இப்பிடி சுத்துறதுக்குப் பேரு 'டிஸ்கஷன்'னு வச்சிருந்தாங்க. இப்ப ஃபோட்டோ ஷூட்டுன்னு மாத்தீட்டாங்களோ ? நல்லா ஷூட் பண்ணுங்க கமல் சார்.

சினேகாவின் கடைசி படம¢?

 
 
 
பிரசன்னா, சினேகா காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்த சினேகா தற்போது 'ஹரிதாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். குமாரவேலன் இப்படத்தை இயக்க உள்ளார். ஹீரோவாக, வில்லன் நடிகர் கிஷோர் நடிக்கிறார். இவர்களுடன் 8 வயது சிறுவன் ஒருவன் நடிக்க உள்ளான். ஏற்கனவே 'கோச்சடையான்' படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க இருந்த சினேகா அப்படத்திலிருந்து திடீரென்று விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹரிதாஸ்'தான் சினேகாவின் கடைசி படமாக இருக்கும் என¢றும் திருமணத்துக்கு பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போடு வார் என்றும் கூறப்படுகிறது.



சிரிப்பால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் - ஜனனி அய்யர்

 


கோபத்தால் சாதிக்க முடியாததை சிரிப்பால் சாதிக்க முடியும் என்று நடிகை ஜனனி ஐயர் கூறியுள்ளார். பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜனனி ஐயர். அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அவர், அமீரின் மாணவர் அஸ்லாம் இயக்கும் "பாகன் படத்தில் நடித்து வருகிறார்.

எப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் ஜனனி, அந்த சிரிப்பிற்கான காரணத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். கோபத்தால் சாதிக்க முடியாததை, புன்னகையால் சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன். நம்ம குணம் எப்படிப்பட்டது என்பதை சொல்ற விசிட்டிங் கார்டே இந்தப் புன்னைகைதான். சினிமாவில் ஜெயிக்க இந்த விசிட்டிங் கார்டு எப்பவும் என் இதழ்களில் இருந்துக் கொண்டே இருக்கும், என்று கூறியிருக்கிறார் ஜனனி.

டைரக்டர் பாலா குறித்து கூறுகையில், பாலாவை என் லைஃப்ல யாருடனும் ஒப்பிட முடியாது. பாலா சார் இப்ப கூப்பிட்டாலும் அதே நன்றியோடு பேசுகிறேன். என் வீடு, கமிட் ஆகிற படங்கள் என எல்லாவற்றையும் அவரிடம் சொல்றேன். பாகன் பட வாய்ப்பை முதலில் சொல்லி பகிர்ந்துக்கிட்ட நபர் பாலாதான், என்று கூறியுள்ளார்.

கொடுமைடா சாமி ....ஐ.நா. கூட்டத்தில் பேசுகிறார் குஷ்பு!!

 
 
 
இளைய தலைமுறையினரின் ஆற்றல் குறித்து பேச, ஐ.நா. சபையின் அழைப்பை ‌ஏற்று கென்யாவிற்கு பயணம் செய்ய இருக்கிறார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறியதாவது, நாட்டின் எதிர்காலமே அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட உள்ளது. 2013 இளைஞர்களின் தன்னிகரற்றத் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதற்கான சிறப்புக்கூட்டம் ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளவும், இளைஞர்களைப் பற்றியும், இளைய தலைமுறையினர் பற்றியும் சிறப்பு‌ரையாற்ற அழைப்பு விடுத்திருந்தனர்.
 
2013ல் இளைய தலைமுறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா. சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் தினமும் 20 டாலருக்கு குறைவாக வருமானம் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த, இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று பேச போகிறேன். அதற்கான கூட்டம் மார்ச் 15ம் முதல் 18ம் தேதி வரை ஐ.நா. சபை சார்பில், கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக கென்யாவுக்கு கிளம்புகிறேன்.
 
இன்றைய உலகின் ஒவ்வொருவரின் வெற்றியிலும் இளையதலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. அது தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதிபலிப்பேன் என்று கூறியுள்ளார்.



சீமான் நடிக்கும் மாறுபட்ட கதைக்களத்தைக்கொண்ட புலனாய்வு படம்


தமிழ் சினிமாவில் எத்தனையோ புலனாய்வுப் படங்கள் வந்திருந்தாலும் ஒரு யதார்த்தமான அதே நேரம் புலனாய்வு அதிகாரிகளின் புலனாய்வுத் தந்திரங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடுதல்கள் என புதிதாகச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் நடிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி.முரளி- ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை அடுத்த ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள் அதனை சிபிசிஐடி யாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறு விறுப்பான திரைக்கதை.