Monday, 27 February 2012

பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்

 
 
தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். 1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். பின்னர் அக்கட்சியை கலைத்தார். 2006 ஏப்ரல் 5-ந் தேதி தி.மு.க.வில் இணைந்தார்.
 
தற்போது அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். சமீப காலமாக பாக்யராஜுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அ.தி.மு.க.வில் சேர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள். அ.தி.மு.க.வில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் அவ்விழா நடைபெறவில்லை. விரைவில் பாக்யராஜும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் சேர உள்ளனர். இது குறித்து பாக்யராஜ் குடும்பத்தினரிடம் கேட்ட போது அ.தி.மு.க.வில் இணைவதை மறுக்கவும் இல்லை. உறுதிபடுத்தவும் இல்லை.
 
பாக்யராஜ் புதுவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவித்தனர். அ.தி.மு.க.வில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் ஜெயலலிதா அழைப்புக்காக காத்து இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.



அடுத்த படம் ! : ஷங்கர்

 
 
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.
 
ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
 
இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.
 
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.
 
இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன். இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. " என்று தெரிவித்து இருக்கிறார்.



காதலை மறுக்கும் பாவனா!

 
மலையாள நடிகருக்கும் நடிகை பாவனாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாவனா தமிழில் "சித்திரம் பேசுதடி" படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளைக்கும் காதல் என்று தகவல்கள் வந்துள்ளன. ராஜீவ்பிள்ளை கேரளாவில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா
மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார். ராஜீவ்பிள்ளையும் பாவனாவை காதலிக்கவில்லை என மறுத்துள்ளார். ஆனால் இருவரும் ரகசியமாக