Monday, 19 December 2011

இன்றைய முக்கிய செய்திகள்




ஜெயலலிதா அதிரடி - அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பமே நீக்கம்
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா

கட்சியை கைபற்ற சசிகலா திட்டம்? கட்சியை கைபற்ற சசிகலா திட்டம்?
அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தன்னுடைய உயிர்த் தோழியான சசிகலாவை அதிரடியாக நீக்கியுள்ளார்

ஜெயா - சசி திடீர் பிளவு பின்னணி என்ன? reason for jeya - sasi friendship break? ஜெயா - சசி திடீர் பிளவு பின்னணி என்ன?
''யார் இங்கே சி.எம்.? நானா? சசியா?" - மந்திரிகளிடம் கொந்தளித்த ஜெ. ''பெங்களூரு

சசிகலா போயஸ் கார்டனுக்குள் புகுந்தது எப்படி? சசிகலா போயஸ் கார்டனுக்குள் புகுந்தது எப்படி?
தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவிதான்

சென்னையில் பரவும் சென்னையில் பரவும் "குடும்ப விபசாரம்"
சென்னையில் வேகமாக பரவி வரும் "குடும்ப விபசாரம்" பொது மக்களையும் போலீசாரையும் அதிர்ச்சியில்
உடலழகைக் காட்டி ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண்கள் கைது உடலழகைக் காட்டி ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண்கள் கைது
சென்னையில் ஓடும் பஸ்சில் உடலழகைக் காட்டி ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண்கள் கைது
உலக அளவில் மிக குள்ளமான பெண்: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய பெண்
சினிமாவில் நடிப்பதே என்னுடைய ஒரே ஆசை என்று உலக அளவில் மிக குள்ளமான
சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வர்த்தகம், தொடக்க தினமான திங்கள்கிழமையன்று மிகவும் மந்தமாக இருந்தது. தொடர்ந்து
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா தோல்வி
உலக தர வரிசையில் முதல் 8 இடங்கள் வகிக்கும் வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற உலக
பயிற்சி கிரிக்கெட்:இந்தியா 269 ரன்
ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது,
படப்பிடிப்பிலிருந்து 'நிர்வாண புகழ்'நடிகை வீணா மாலிக் மாயம்
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணாமாலிக், இந்திய ஃபேஷன் பத்திரிகைளான FHM - ன்
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் பிபாஷா பாசு காதல் முறிந்தது
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் (38). இவருக்கும், நடிகை பிபாஷாபாசுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழகான பெண்களை கொடுக்கிறீர்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கேட்டால் மட்டும் கொடுக்க மாட்டேன்கிறீர்களே?
ஆர்யா-மாதவன் இணைந்து நடித்து, லிங்குசாமி டைரக்டு செய்துள்ள படம், 'வேட்டை' இந்த படத்தின்
எனக்கும் சிலுக்கா நடிக்க ஆசை - பிந்துமாதவி
பாலிவுட் நடிகை வித்யாபாலன், சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தது போல், தானும் நடிக்க
சென்னை பட விழாவில் செங்கடலும் தென்மேற்கு பருவக்காற்றும் !
சென்னையில் நடைபெற்று வரும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் பங்கேற்ற




விஜய்யை வம்புக்கு இழுக்கும் பாரதிராஜா...!

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பாரதிராஜா. தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும் குரல் கொடுப்பார். அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கி கொண்டு இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திரையுலகினர் யாரும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னணி ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து, ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா. பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் பாரதிராஜா, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே டில்லியில் போராட்டம் நடத்தியபோது, இங்கே தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டில்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் சம்பந்தப்பட்ட அந்த கலைஞனுக்கு இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன், அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அந்த நடிகருக்கு தேனிக்கு செல்லும் வழிதான்

தெரியாதா?
என்று கடுமையாக சாடியுள்ளார். பாரதிராஜா இப்படி கடுமையாக சாடியிருக்கும் அந்த நபர் வேறுயாரும் அல்ல, நடிகர் விஜய் தான். இதற்கு விஜய் என்ன பதில் சொல்ல போகிறாரோ...?

கார்டனில் மாற்றத்தை ஏற்படுத்திய "பவர் புல்' பைல்: ஜெயலலிதா கண்ணில் பட்டது எப்படி?

டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.


"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.


முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.


அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.


கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.


அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.


விடுமுறையில் ஓட்டம்:கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.