Sunday, 27 November 2011

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்போட் காணக் கிடைக்காத வீடியோ

 
 

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.


இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? 'மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ' என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.

இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு இடம் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் ஆங்கிலத்தில் சப் டைட்டில் வருகிறது. படித்து இன்புறுங்கள் வாசகர்களே...
thillana mokanaampal video , old tamil movie shooting spot video , movies shooting spot videos , youtube video

மயக்கம் என்ன திரை விமர்சனம்

 
 
படம் : மயக்கம் என்ன

நடிப்பு : பதனுஷ் , ரிச்சா கங்கோபதி, மற்றும்
பலர்

இசை : ஜி .வி பிரகாஸ்

இயக்கம் : செல்வராகவன்

தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்கிட்


"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.
mayakkam enna movie review

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக 'நல்ல ஃபிகரா' தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.


ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா 'வெண்ணிலவே' பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.

அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க.

'இது அடுத்த தலைமுறைக்கான படம்'னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..

கதை - அட அத தாம்பா என்னனு நானும் யோசிச்சிட்டு இருக்கேன்

மயக்கம் என்ன - (மப்பு ஏத்தாமலே )

பிரபாகரன் பிறந்தநாள்... உலகெங்கும் கொண்டாட்டம்!

 
 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.


கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புலிகளின் வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக இலங்கை புலம்பிக் கொண்டுள்ளது. அதே நேரம் 'போர்க்குற்றவாளி' மகிந்த ராஜபக்சேவும் அவரது தம்பிகளும் எந்த நாட்டுக்குள்ளும் கால் வைக்க முடியாத அளவுக்கு தமிழர் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக இன்னொரு தரப்பு கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிப்படுத்தவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று வந்துள்ளது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார்.

நாளை நடக்கும் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளன. இன்று பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.

நாளை நடக்கும் மாவீரர் தினத்தையொட்டி சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள்.

நாமக்கல்லில் சீமான் தலைமையில் மாவீரர் எழுச்சி தினக் கூட்டம் நடக்கிறது. இந்த எழுச்சி கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், தடையை மீறி இக்கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

 
 
 
ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 
பிரதாப் குமார் வர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை 'ஈசி ரீசார்ஜ்' செய்தபோது, அந்த குறிப்பிட்ட திட்டத்துக்கென அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை.
 
இதனால், ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று கூறி, கடந்த 2009-ம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா மோசடி வழக்கு தொடர்ந்தார்.
 
இவ்வழக்கில், கடந்த மே 21-ந் தேதி, அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு மாஜிஸ்திரேட் பி.கே.பாண்டே நேற்று உத்தரவிட்டார்.
 
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு தடை கோரி வழக்குத் தொடர தயாராகி வருகிறார் அனில் அம்பானி.



கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! - சௌந்தர்யா

 
 
ராணாவை நிறுத்திவிட்டு கோச்சடையானை ஆரம்பிக்க, ரஜினியின் உடல்நிலை காரணமல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். இந்தப் படத்திலும் முழுமையாக அவர்தான் நடிக்கப் போகிறார், என சௌந்தர்யா ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
 
கோச்சடையான் என்ற புதிய படத்தை ரஜினி அறிவித்ததிலிருந்து அது தொடர்பாக பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யா கூறுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் ஒரு நடிகருக்கு படம் தயாராவது அப்பாவுக்குதான் (ரஜினி). கோச்சடையான் என்பது சிவபெருமானின் பெயர். இந்தப் படம் சுல்தான் அல்ல. இது முற்றிலும் புதிய படம்.
 
அதேநேரம் ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் 2012-ல் தொடங்கிவிடும்.
 
கோச்சடையான் வெறும் அனிமேஷன் படம் அல்ல. இந்தப் படத்தில் முழுமையாக அப்பா நடிக்கிறார். அவரது காட்சிகள் ஒரு ஸ்டுடியோவுக்குள் படமாக்கப்பட்டு, மோஷன் கேப்சரிங் முறையில் மாற்றப்படும். உடல்ரீதியாக அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். கோச்சடையான் தொடங்க அவர் உடல்நலம் காரணமல்ல. இந்தப் படத்தில் நடிக்க அப்பாவே விரும்பி, ஆரம்பிக்கச் சொன்னார்.
 
பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்," என்றார்.



நிர்வாணமாக நடிக்க தயார்- லட்சுமி ராய்!!

 
 
நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார். இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.



இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை

 
 
 
இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
 
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது. பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணைய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூலம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது. தற்போது, இணைய தளங் கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போலியான தகவல் களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
 
இதன் மூலம் ஆபாச படம், காட்சி களை பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புறம் பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் பார்த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.
 
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதி காரி ஒருவர் கூறுகையில், ''இணைய தளம் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். ஆபாச படங்கள், காட்சி களை பறிமாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண்டுகள், தொ டர்ந்து செய்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு'' என்றார்.
 

 


சபரிமலையில் பரபரப்பு-ஆண் வேடத்தில் 18ம் படி ஏற முயன்ற இளம்பெண்!

 
 
சபரிமலையில் ஆண் வேடம் அணிந்து நேற்று காலை 18ம் படி ஏற முயன்ற ஒரு இளம்பெண் பிடிபட்டார்.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களை கண்காணிக்க பம்பையில் ஏராளமான பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 40 பேர் அடங்கிய ஒரு பக்தர்கள் குழு சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் சிறுவர், சிறுமியர் மற்றும் வயதான பெண்களும் இருந்தனர். இவர்களுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் இருந்துள்ளார். அவர் ஆண் போல கருப்பு வேஷ்டி, சட்டை அணிந்து இருந்தார்.
 
கூட்டமாக சென்றதால் இவரை போலீசார் கவனிக்கவில்லை. இந்த குழுவினர் சரங்குத்தி பகுதியை தாண்டி சன்னிதானத்தை அடைந்தனர். பின்னர் 18ம் படி அருகே தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தனர்.
 
இதில் அவரது பெயர் தேவி என்பதும் தனது கணவர் நாயுடுவுடன் சபரி்மலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரை உடனடியாக போலீசார் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சபரிமலையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



தலை சுற்றவைக்கும் மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்

 
 
மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள உத்தேச கட்டணம் விபரம் வருமாறு:
 
மின்சார கட்டணம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 -ம் 100 முதல் 600 யூனிட் வரை ரூ.5.75 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.6.80, தொழிற்சாலைகளுக்கு ரூ. 5.00, தனியார் பள்ளிகளுக்கு ரூ.5.50, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.4.50, வழிபாட்டு தலங்களுக்கு ரூ.4.50, கடைகளுக்கு ரூ.6.80-ம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
விவசாயிகளுக்கு ஒரு குதிரை சக்தி மோட்டாருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,750 ஆகவும், குடிசைகளுக்கான மாத மின் கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்

 

மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள உத்தேச கட்டணம் விபரம் வருமாறு:

மின்சார கட்டணம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 -ம் 100 முதல் 600 யூனிட் வரை ரூ.5.75 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.6.80, தொழிற்சாலைகளுக்கு ரூ. 5.00, தனியார் பள்ளிகளுக்கு ரூ.5.50, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.4.50, வழிபாட்டு தலங்களுக்கு ரூ.4.50, கடைகளுக்கு ரூ.6.80-ம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரு குதிரை சக்தி மோட்டாருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,750 ஆகவும், குடிசைகளுக்கான மாத மின் கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவாகரத்து தீர்ப்பின் போது இணைந்த தம்பதிகள்: தமிழ் சினிமாவையும் மிஞ்சிய திருப்பம்

 
 
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள கண்ணகி நகரில் மளிகை கடை வைத்திருக்கும் மணிகண்டன் (வயது 26) என்பவருக்கும், ஓமலூர் பக்கம் உள்ள பண்ணப்பட்டி குதிரைபள்ளம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரின் மக்கள் சிந்துஜா, வயது 21 என்பவரும் நீன்ட நாள காதலர்கள்.
 
இவர்களின் காதலுக்கு சிந்துஜாவின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு ஓமல்லோரில் நண்பர்களின் துணையோடு தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.
 
 
திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர், ஒரு நாள் சிந்துஜாவின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நீ வீட்டை விட்டு வந்த பின்னர் உனது நினைவாகவே அம்மா இருக்கிறார் என்றும், நீ மட்டும் ஒருமுறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு வரலாம் என்று ராஜு வந்து தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.
 
 
இப்போது வருவார், காலையில் வருவார் என்று மணிகண்டன் காத்திருந்தார், ஆனால், போன சிந்துஜா திரும்பி வரவே இல்லை. இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிந்துஜாவிடம் இருந்து மணமுறிவு (விவாகரத்து) கேட்டு வழக்குறைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
 
 
வாழவெட்டியா போறதுக்கு பொம்பளையே தயாரா இருக்கும் போது உனக்கு என்னடா..? நீ ஆம்பாளை சிங்கம் உனக்கு இன்னும் நாலு கல்யாணம் செய்யலாமடா தம்பி என்று மணிகண்டனின் உறவினர்கள் சொல்ல, சிந்துஜாவின் விருப்பப்படி தனக்கும் மணமுறிவு செய்துகொள்ள சம்மதிப்பதாக மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மணிகண்டன்.
 
கடந்த ஒன்னரை வருடமாக மணமுறிவு வழக்கு நடந்து வந்தது. ஒவ்வொரு வாய்தாவிற்க்கும் மணிகண்டனும், சிந்துஜாவும் மேட்டூர் நீதிமன்றத்துக்கு வந்தாலும், இருவரும் பக்கத்தில் நெருங்காதபடி பார்த்துக்கொண்டார் சிந்துஜாவின் அப்பா ராஜு.
 
 
24.11.2011 அன்று மதியம் நீதிமன்றத்துக்கு வந்த சிந்துஜாவையும் மணிகண்டனையும் அழைத்த நீதிபதி ஜெயந்தி அவர்கள், நீங்கள் இருவரும் பிரிந்து செல்ல சம்மதிக்கின்றீர்களா..? என்று கேட்டுள்ளார்.
 
 
அப்போது காதல் மனைவியை கண்களால் மணிகண்டன் பார்த்துள்ளார். மணிகண்டனை நேருக்கு நேராக சிந்துஜா பார்த்துள்ளார். எனக்கு விருப்பம் இல்லை என்று இருவரின் கண்களும் பேசியது...
 
என்ன குழப்பம்...? உங்களை பிரிந்து போக சொல்லி யாராவது நிர்பந்தம் செய்கிறார்களா..? தைரியமாக சொல்லுங்கள் நீங்கள் பிரிந்து போக மனப்பூர்வமாக சம்மதிக்கிறீர்களா..? என்று மீண்டும் அழுத்தி கேட்டுள்ளார் நீதிபதி.
 
 
எனக்கு என்னுடைய மனைவியை பிரிய விருப்பம் இல்லை... என்னையும், என்னுடைய தாயாரையும் மிரட்டி "நீ விவாகரத்து கேட்டு கோர்ட்டுல கேஸ் போட்டு என்று மிரட்டினார்கள் அதனால் தான் நான் இந்த கோர்ட்டுல மனுதாக்கல் செய்தேன் என்று சொல்லியுள்ளார் மணிகண்டன்.
 
 
சிந்துஜாவிடம், நீ என்னம்மா சொல்லறே ...? என்று நீதிபதி கேட்க... சிந்துஜாவும், நான் என்னுடைய கணவருடன் தான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்... ஆனால், என்னுடைய அப்பாதான் எங்களை பிரிக்கிறார், "எங்களை நீங்கள் தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சொல்லி விட்டார்.
 
மணிகண்டன், சிந்துஜா இருவரும் போட்ட விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயந்தி, மேட்டூர் காவல் ஆய்வாளரை நீதிமன்றத்துக்கு அழைத்து இருவரையும் சேர்ந்து வாழ தேவையான பாதுகாப்பை இருவருக்கும் கொடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
 
 
விவாகரத்து வாங்க வந்த காதல் திருமண தம்பதிகளை, நீதிமன்றத்திலிருந்து மேட்டூர் போலீசார் பாதுகாப்புடன் ஓமலூருக்கு அழைத்து வந்து மணிகண்டனின் வீட்டில் விட்டுள்ளனர்.